தீபாவளிக்கு ஒரு வெட்டு வெட்டலாமா!!!!!

    


    ஆடு வளக்குறது அழகு பார்ப்பதற்கு இல்ல கோழி வளக்குறது கொஞ்சுறதுக்கு இல்ல !!!

    இந்த பழமொழியில் இருந்து என்ன  தெரியுது எல்லாமே சமைச்சு சாப்பிடத்தான் 
ஆட்டிறைச்சி உலகத்தின் இருந்து மிகவும் பழமையான உணவு வகைகளில் ஒன்று. நமது முன்னோர்கள் பல்வேறு காரணங்களுக்கா கடவுளுக்கு பலி கொடுத்தார்கள். அதில் பல வித பறவைகள் மற்றும் விலங்குகள் இடம் பிடித்து இருந்தன அதில் அப்போதும் இப்போதும் ஆடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்ட சுத்தம் செய்து அதை பலியிடும் இடத்திற்க்கு கூட்டி சென்று தலையில் மஞ்சள் தண்ணீர ஊற்றி ஆடு தலையாட்டியதும் ஓரே வெட்டு !! தலை வெட்டியதும் உடலை சுத்தம் செய்து சமைத்து சுட சுட படையல் சோறு அனைவருக்கும் பரிமாறப்படும்.

    பெரும்பாலும் நமது முன்னோர்கள் தனது குலங்களையும் ஊரையும் காக்கும் தெய்வங்களுக்கு  (கருப்பு , முனி, சுடலை, மாடன், பேச்சி, ராக்காயி ) பலியிடும் பழக்கம் இருந்துள்ளது. குலதெய்வ வழிபாடு பெரும்பாலும் மக்களை நெறிப்படுத்தவும் குடும்ப ஒற்றுமை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது. 

    பெரும்பாலான குல தெய்வ கோவில்கள் மலையின் மீதோ காட்டு பாதையிலோ குளம் மற்றும் ஆற்றுப்படுகையிலோதான் அமைந்து இருக்கும். ( இப்ப எல்லாமே அப்பார்ட்மெண்ட் ஆகிவிட்டன.)குல  தெய்வ வழிபாடு என்பது வருடம் ஒரு முறை தனது குடும்பத்தில் உள்ள அனைத்து அங்காளி பங்காளி அனைவரையும் வண்டி கட்டி அழைத்து சென்று மூன்று நாள் முதல் ஏழு நாள் வரை தெய்வங்களை வழிபாடு செய்வார்கள்.

நமது புராண புத்தகத்திலும் பலியிடல் பற்றிய பல விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சுடலை மாடன் தனக்கு எவ்வாறு படையல் படைக்க? எப்படி படைக்க வேண்டும்? என்று அவரே சொல்லியிருக்கார் அதை சுடலை கேட்ட படைப்பு சோறு என்ற கட்டுரையில் இவ்வாறு உள்ளது.

சுடலை கேட்ட படைப்பு சோறு:

    ஆட்டின் தலையை தனியே வைத்துவிடவும்: மூட்டெலும்பைத்  தனியே அவித்துச் சமைக்கவும்: மூளையை பிரித்து எடுத்து மிளகு சேர்த்துக் கிண்டி வைக்கவும் இறைச்சித் துண்டுகளைக் குண்டுச்சட்டியில் வேக வைத்து வண்டுக்கட்டிவிடு ஈரலை நெருப்பில் வாட்டியவை எல்லாம் சுட சுட வேண்டும் இலை மட்டுமல்ல மண் தோண்டியிலே சுடச்சுட  வேண்டும்.

    புழந்தமிழர்கள் தங்களது வெற்றியை கொண்டாடவும் வீட்டில் நடைபெறும் விழாக்களுக்கு ஊர் திருவிழாக்களுக்கும் தங்களது குல தெய்வ வழிபாடுகளுக்கும் ஆட்டினை வெட்டி கொண்டாடுகிறார்கள். இன்றளவும் கிடா வெட்டு என்பது திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் கீழ்கண்ட ஆடுகளை அதிகம் இறைச்சிக்கு உபயோகப்படுத்துகிறார்கள் 

1. ஜெமுனாபுரி ஆடு 
2.மலாபாரி ஆடு 
3.பார்பாரி ஆடு 
4.பிட்டல் ஆடு 
5.தளச்சேரி ஆடு 
6.சிரோச்சி ஆடு 
7.ஓஸ்மனாபாடி ஆடு 
8.கன்னி ஆடு 

    இதில் கன்னி ஆட்டின் இறைச்சி சிறப்பு மிக்கது.இதனை புள்ளையாடு மற்றும் கரப்புவாடு  என்றும் கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் மட்டுமே வளர கூடிய இந்த வகை ஆடு விருதுநகர் ராம்நாடு திருநெல்வேலி பகுதியில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. வறட்சி மிகுந்த பகுதியிலும் எளிதாக வளர கூடியது.

    முனியாண்டி விலாஸ் ஆட்டு எலும்பு ரசம் மிலிட்டிரி  ஹோட்டல் மட்டன் சுக்கா பாய் (பாவா) ஹோட்டல் பாயா கோனார் கடை கறி தோசை தலபா கட்டு பிரியாணி -னு  சொன்னதும் நாக்குல எச்சி ஊருதா அனைத்துமே ஆட்டிறைச்சிக்கு பெயர் பெற்ற உணவகம். நம் வாழ்வில் ஒரு முறையேனும் ருசிக்க வேண்டிய உணவு வகைகள்.




1.மதுரை மட்டன் சுக்கா கோல  உருண்டை 
3.செட்டிநாடு மட்டன் குழம்பு 
4.புதுச்சேரி மட்டன்  ரோஸ்ட் 
5.கடையநல்லூர்  மட்டன் கிரேவி 
6.ஆம்பூர் திண்டுக்கல் பிரியாணி 
7.காரைக்கால் கறி பக்கோடா 

    ஆட்டின் அனைத்து பாகங்களும் நமது உடலுக்கு பல  வித நன்மை அளிக்கக் கூடியது.
    மூளை - உடலுக்கு தேவையான Omega 3, Fatty Acids மனிதனின் மூளை மற்றும் முதுகு தண்டவத்தையும்  பாதுகாக்கிறது.
    ரத்தம் , ஈரல் மாற்று நுரையீரல் - உடலில் ரத்தத்தை விருத்தி அடைய செய்கிறது.
    குடல் - உடலுக்கு தேவையான விட்டமின் 'பி ' மற்றும் இரும்பு சத்தினை அளிக்கிறது.
    கால் மற்றும் எலும்பு சூப் - காய்ச்சல் இருமல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தலைக்கறி  மற்றும் கறி - புரதசத்து மிக்கது விட்டமின் B6,B12,C,E, and K உள்ளது மேலும் இரும்பு கால்சியம் பிராஸ்பரஸ் காப்பர் பொட்டாசியம் மிக்கது. 

    வித விதமா கலர் கலரா பட்டாசு மட்டும் போதுமா இந்த தீவாளிக்கு வித விதமா வீட்டிலே கிடா விருந்து வைப்போமா !!!! அச்சசோ  சமைக்க தெரியாதே!!!

3 steps களில் வித விதமா மட்டன் வகைகளை சமைக்க தில்லைஸ் இருக்கு .

மசாலா பொடிகளைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பினால், அவற்றின் தோற்றம் சுகாதார நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் எங்கள் வலைப்பதிவுக்கு (CTA)  குழுசேரும்.
        மேலும் தகவல்களை பெற விரும்பினால் இங்கே பதிவு செய்க. Masala University

Author Name:Durga Lakshmi

Comments

Popular Posts