பண்டிகை
காலங்கள் என்றாலே நாமக்கெல்லாம் மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கும். ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் என நம் அளவற்ற
மகிழ்ச்சியாகிடுவோம். வீட்டிற்கு உறவினர்கள் பலரும் வருவார்கள். இதுவே
பண்டிகை நாளின் சிறப்பம்சமாகும். அந்த
வகையில் இன்று 07.10.2021 முதல் 15.10.2021 வரை "நவராத்திரி"
என்கிற வண்ணமயமான ஒரு பண்டிகை நம்
எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சோழர் காலத்தில் நவராத்திரி
திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகை நாளில்
9 விதமான விஷயங்களே எல்லா நாட்களிலும் நாம்
செய்து வருவோம்.
இதன் வரிசையில் உணவும் அடங்கும். நவராத்திரியின்
9 நாட்களிலும் 9 வித நிறங்களில் உணவுகளை
நாம் சாப்பிட்டு வந்தால் அளவற்ற நன்மைகளும்
மட்டற்ற மகிழ்ச்சியும் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம்
முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள்
திருவிழாவாக மாறியது.நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை
விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.
9 வித நிறங்களை கொண்ட உணவுகள் என்னென்ன
என்பதை இனி தெரிந்து கொண்டு
இந்த நவராத்திரியை கொண்டாடுவோம்.
இந்த 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம்
ஒரு உணவை சாப்பிட வேண்டும்
என ஒரு ஐதீகம் உள்ளது.
இந்த 9 நிறங்களும் துர்க்கை அம்மனுக்கு பிடித்தமான நிறங்களாக கருதப்படுகிறது.
முதல் நாள் ஆரஞ்ச் நிறம்
இரண்டாம் நாள் வெள்ளை நிறம்
மூன்றாம் நாள் சிவப்பு நிறம்
நான்காம் நாள் அடர் நீல நிறம்
ஐந்தாம் நாள் மஞ்சள் நிறம்
ஆறாம் நாள் பச்சை நிறம்
ஏழாம் நாள் சாம்பல் நிறம்
எட்டாம் நாள் ஊதா நிறம்
ஒன்பதாம் நாள் மயில் பச்சை நிறம்
முதல் நாள்:
நவராத்திரியின் முதல் நாள் ஆரஞ்ச் நிறத்தில் எதனைச் சாப்பிட்டாலும் அது நன்மை பயக்கும்.
குறிப்பாக ஆரஞ்ச் நிற லட்டுக்க ள்,
பழங்கள் ஆகியவற்றை அம்மனுக்கு படைத்து விட்டு சாப்பிடலாம்.
இரண்டாம் நாள்:
இந்த இரண்டாம் நாளின் வெண்மையான நா-ளாக இந்த நாள் கருதப்படுகிறது.
இந்த நாளில் பால் பாயாசம்,
அல்லது பால் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது அம்மனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாம்.
மேலும்,
இந்த வெண்ணிற உணவுகள் அதிக நலனையும் சத்தையும் நமது உடலுக்கு தரும்.
மூன்றாம் நாள்:
மூன்றாம் நாளான அன்று நவராத்திரியின் துர்க்கை அம்மன் ஆகோரஷமான நிறத்தில் இந்த நாளில் கட்சி தருவார். எனவே, சிவப்பு நிறத்தில் உணவை சமைத்தோ அல்லது சிவப்பு நிற காய்கனிகளை உண்டாலோ நலம் பெறலாம். குறிப்பாக பீட்ரூட், கேரட் ஆகியவற்றை சேர்த்த ஜுஸ் செய்து சாப்பிடலாம்.
நான்காம் நாள்:
நவராத்திரியின் நான்காம் நாளுக்கான நிறம் அடர் நீலம் இந்த நிறத்தில் உணவை தயாரித்து சாப்பிட வேண்டும். அத்தி பழங்களை நாம் சாப்பிடலாம். இது உடலுக்கு அதிக நன்மையை தரும்.
ஐந்தாம் நாள்:
நவராத்திரியின் மையத்திற்கு நாம் வந்து விட்டோம்.
இந்த ஐந்தாம் நாளில் மகத்துவம் பெற்ற நிறம் மஞ்சள்.
இந்த நாளில் மஞ்சள் நிறத்தில் இருக்க கூடிய பழங்களையோ அல்லது உணவுப்பொருளையோ சாப்பிடலாம்.
குறிப்பாக பாதாம் பால். ஆறாம் நாள்:
நவராத்திரியின் ஆறாம் நாளின் நிறம் பச்சை. இந்த நன்னாளில் பச்சை வாழைப்பழம், அல்லது பச்சை நிற ஆப்பிள் உண்ணலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலிமை தருவதோடு, அம்மனின் அருளையும் பெற்று தருமாம்.
ஏழாம் நாள்:
நவராத்திரியின் ஏழாம் நாளின் சாம்பல் நிறம் அல்லது பழுப்பு நிறத்தை கொண்ட உணவை இந்த அருள்மிக்க நாளில் உண்ண வேண்டும். குறிப்பாக ஏதேனும் காய்கறிகளை கொண்ட உணவை சாப்பிடுவது உகந்தது. அல்லது, பூரி சப்பாத்தி போன்றவற்றைசெய்தும் சாப்பிடலாம்.
எட்டாம் நாள்:
கிட்டத்தட்ட
நவராத்திரி
முடியும்
தருவாயில்
உள்ளது
. இந்த
எட்டாம்
நாளில்
நீல நிற பழங்கள்
சாப்பிடுவது
மிக
சிறப்பானதாம்
. ப்ளூபெரி, திராட்சை போன்றவற்றை
சாப்பிட்டுவது
உடலுக்கும்
மனதுக்கும்
நன்மை
தரும்
.
ஒன்பதாம் நாள்:
கடைசி நாளான அன்று அம்மனுக்கு அம்பிகையை நான்கு வயது பெண்ணாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்று முத்து போல் விளங்கும் ஜவ்வரிசியினால் மலர்க் கோலம் போட வேண்டும்.
நாம்
இந்த காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் போது, பிரசாதமாக வழங்கப்படும்
தானியங்களால் ஆன பிரசாதம் நம்
உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கொடுத்து,
உடலை வலுப்படுத்தவல்லது.
இதனால் நவராத்திரி விழாவை நாம் வெறும் ஆன்மிக ரீதியாகப் பார்க்காமல், அதை அறிவியல் ரீதியாகவும் பார்த்து அதன் பாரம்பரியத்தைக் காத்து, நம் தலைமுறையை பாரம்பரியத்தோடு வளர்ப்பது நம் கடமை.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள்.
Author Name: Naga Priya.S
Comments
Post a Comment