உலக உணவு பாதுகாப்பு தினம் 2021.....!







உங்களுக்கு தெரியுமா !!!

        07.06.2021 மூன்றாவது உலக உணவு பாதுகாப்பு தினம். உலக உணவு பாதுகாப்பு தினம் WHO & FAO-வால் உருவாக்கப்பட்டது .

    ஒவ்வொரு வருடமும் ஒரு மையகருத்தினை கொண்டு இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது.இந்த வருடத்தின் மையக்கருத்து  " ஆரோக்கியமான நாளைக்கு இன்றைய  பாதுகாப்பான உணவு".

    இந்தியாவில் தயாரிக்கபடும் மசாலா உற்பத்தியில் உணவு பாதுகாப்பின் முக்கியதுவத்தை பற்றி பேச சரியான தருணம் என்று கருதுகிறோம். மசாலா உற்பத்தியில் பின்பற்றபடும் சிறந்த உணவு பாதுகாப்பு கொள்கைகளை பார்ப்போம்.எங்களின் கணிப்பின் படி இந்தியாவில் மசாலா உற்பத்தி ஆண்டுதோறும் ரூ .40,000 கோடி அதில் பதிவு செய்யபட்ட உற்பத்தி கூடங்களில் இருந்து தயாரிக்கபட்ட மசாலாக்கள் ரூ.8000 கோடி மட்டுமே...

    கடந்த 15 ஆண்டுகளில் மசாலா விற்பனையில் இந்தியா மிக பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. வீட்டில் அரைத்த காலம் சென்று பல்பொருள் அங்காடி செண்று பல விதமான மசாலா பாக்கெட்களை வாங்கி செல்கின்றனர். மசாலா விற்பனை ஆண்டு தோறும் 12 முதல் 15 சதவீதம் வளர்ச்சி காண்கிறது.நாம் உணவை பரிமாறும் பொது அன்பையும் சேர்த்து பரிமாறுகிறோம்.அந்த அன்பு பாதுகாப்பானதா....!! என்பதினை நாம் உறுதி செய்ய வேண்டும்.

    பாதுகாப்பான மசாலா உற்பத்தி மற்றும் விற்பனை அனைவரின் பொறுப்பாகும். மசாலாவிற்க்கு தேவையான மஞ்சள், மிளகாய், மல்லி, சீரகம் மற்றும் மிளகு உற்பத்தி செய்யும் விவசாயிடம் இருந்து நுகர்வோர் சமையலறை வரை கொண்டு செல்லும் மசாலா உற்பத்தியாளர்கள், முகவர்கள்  மற்றும் கடைக்காரர்கள் அனையவருக்கும் பங்கும் உள்ளது. நுகர்வோர்களும் உணவு பாதுகாப்பினை அவர்களது சமையலறையில் பின்பற்ற வேண்டும்.உணவு பொருட்களை வாங்கும் போது நாம் அதனை எங்கு வாங்குகிறோம்? எதை வாங்குகிறோம்? எவ்வாறு சேமிக்கிறோம்? எப்படி உபயோகிக்கிறோம்? என்பதனையும் அறிந்து கொள்ள வேண்டும்.

உணவு பாதுகாப்பில் அரசின் பங்கு:

    சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் 2011 ஆம் ஆண்டளவில் (FSSAI) இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமாக உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-யை நடைமுறைப்படுத்தியது. இச்சட்டம் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

    நுகர்வோர் உணவு பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ள மிக பெரிய வாய்ப்பாக  அமைந்தது. இதன் மூலம் 27 பூச்சி கொல்லிகளை தடை செய்யும் அளவுக்கு சட்டம் இருந்தது. இதன் மூலம் மக்கள் பெரும்மளவு பயனடைந்தனர்.

உணவு பதிலாப்பில் உணவு தயாரிப்பாளர்களின் பங்கு :

    உணவு பாதுகாப்பில் விவசாயிகள் மற்றும் மசாலா தயாரிப்பாளர்களின் பங்கு அளப்பரியது. பயிரிடும் போது நல்ல விவசாயிகள் முறையினை கடைபிடிப்பதன் மூலம் பல விதமான ஆபத்துக்களை முதலிலே தடுக்க முடியும். தயாரிப்பாளர்கள் நல்ல தயாரிப்பு முறையினை கடைபிடிப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் ரசாயனத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

உணவு பாதுகாப்பில் முகவர்கள் / கடைக்காரர்கள்/பல்பொருள் அங்காடி நிறுவனத்தினர் / விநியோகஸ்தர்  பங்கு:

    மசாலா பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமிக்க வேண்டும் இல்லை என்றால் அதில் பூச்சி தோற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

    சரக்கு வைத்து அனுப்பும் இடத்தில் முதலில் வந்த சரக்குகளை முதலிலும் இறுதியில் வந்த சரக்குகளை இறுதியிலும் அனுப்பும் முறையை பின்பற்ற வேண்டும் பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். 

    நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவினை கொண்டு சேர்ப்பது அனைவரின் கடைமையாகும்.நுகர்வோர்களும் மசாலா வாங்கும் பொது நாம் வாங்கும் மசாலா சரியான விதைத்தில் தயாரித்து பேக் செய்து இருக்கிறதா? என்பதினை உறுதி செய்ய வேண்டும். பேக்கில் உற்பத்தி செய்த தேதி மற்றும் காலாவதியாகும் தேதி தெளிவாக குறிப்பிடபட்டு இருக்கிறதா? என்பதினையும் உறுதி செய்ய வேண்டும்.

    உலகில் மசாலா வணிகத்தில் இந்திய பெரும் பகுதியை கொண்டுள்ளது. உலகின் பெரிய பெரிய மசாலா நிறுவனங்களும் இந்தியாவில் இருந்தே மசாலா பொடிகளை வாங்குகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மசாலா வணிகத்தில் நவீன தொழில் நுட்பத்தினை அறிமுகபடுத்தி மிக பெரிய மாற்றத்தினை கண்டுவருகிறது.

    மதிப்பு கூட்டபட்ட மசாலா பொருட்களுக்கு இந்திய முக்கிய ஆதார மையமாக உள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு தரங்களில் இந்தியா உலகளவில் ஒரு முன்னோடியாக உள்ளது. இது ஏற்றுமதிக்கு மட்டும் இல்லாமல் உள்நாட்டு மசாலாவிற்கும் பொருந்தும்.

    பல நிறுவனங்கள் BRC, SQC மற்றும் FSSC 22000 போன்ற மேம்பட்ட உணவு பாதுகாப்பு தரங்களை செயல்படுத்தி வருகின்றன. தங்கள் நிறுவனத்தின் உள்ளேயே பலவித ஆய்வு கூடங்கள் வைத்துள்ளது. அதில் HPLC, LC-MS/MS and Mass Spectroscopy போன்ற அதிநவீன உபகரணங்களை வைத்துள்ளது. உதாரணமாக 2010 ஆண்டுமுதல் VPSA Paramasiva Nadar Group-யில் அனைத்து உற்பத்தி வசதிகளுக்கும் BRC  தர சான்றிதழ் பெற்றுள்ளன மேலும் பாதுகாப்பு மற்றும் தர உத்திரவாதத்திற்காக  அதிநவீன உபகரணங்களை வைத்துள்ளது.

உணவு பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பாகும்:

        இந்தியவில் தமாவில் மசாலா நிறுவனங்கள் உணவிற்க்கு மணம், நிறம் மற்றும் சுவை தருவது மட்டுமல்லாது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான மசாலா பொருட்களையும் தயாரித்து வழங்குகிறது என்பதில் அய்யமில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நாம் உணவு பாதுகாப்பினை விவசாயி மற்றும் வணிகர்களுக்கும் கற்பிப்பதன் மூலம் வளமாக வளர முடியும்.

        மசாலா பொடிகளைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பினால், அவற்றின் தோற்றம் சுகாதார நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் எங்கள் வலைப்பதிவுக்கு (CTA)  குழுசேரும்.

        மேலும் தகவல்களை பெற விரும்பினால் இங்கே பதிவு செய்க. Masala University


Comments

Popular Posts