அஞ்சறை பெட்டி !!!...

சமையல் அறையின் மந்திர பெட்டி !!! 


            "நம் மனம் கவர்ந்தவர்களின் மனத்தினை கவர்வதற்கு துணையாக  இருக்கும்  இந்த  மந்திர பெட்டி! "

மந்திர பெட்டி என்பது வேறோன்றும் இல்லை நாம் அன்றாடம் பயன்படுத்தும் அஞ்சறை பெட்டியே!. ஐந்து தனி அறைகளை கொண்டுள்ளதால் அதனை அஞ்சறை பெட்டி என்று அழைக்கப்படுகிறது. நறுமண மசாலாக்களை கொண்டதே  அஞ்சறை பெட்டி. அஞ்சறை பெட்டியினுள்ளே இருக்கின்ற பொருட்கள் சமையலுக்கு மணத்தை மட்டுமல்லாது, மணத்தோடு உடல் நலத்தையும் அதிகரித்து வாழ்க்கையை மணக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்துப் பொருட்களும் சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவே மருந்து என்பது போல் உணவுப் பொருட்களே பல பிணிகளுக்கு மருந்துகளாக பயன்படுகிறது. 

            எங்கள் சமையலறைகளில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கருப்பு மிளகு தூள், மல்லித் தூள்  மற்றும் சீரக தூள் போன்ற தூய மசாலா பொருட்கள் உள்ளன.      

                     

              


    அஞ்சறை பெட்டியை விமானம் இயக்குபவரோடு அடிக்கடி ஒப்பிட்டு பேசுவது உண்டு. ஏனென்றால் விமானத்தின் அனைத்து கட்டுப்பாட்டுக் கருவிகளும் விமானத்தை இயக்குபவரின் கைக்கு அருகாமையிலே பொருத்தப்பட்டிருக்கும்

அதே போன்றே சமயலறையில் சமைக்கும் போது அஞ்சறை பெட்டியிருப்பதினால் ஒவ்வொரு கட்டத்திலும் சேர்க்க வேண்டிய அனைத்து மாசலப் பொருட்களும் கை அருகினிலே இருக்கும்.

       அஞ்சறை பெட்டி பயன்படுத்துவதனால் அக்காலம் முதல் இக்காலம் வரை சமையல் செய்வது மிகவும் எளிதாக மாறிவிட்டது. நம்முடைய வீட்டில் தயாரிக்கும் புதிதான உணவு வகைகளுக்கும் ஒரு ரெடிமேட் மசாலா பொருட்கள் உள்ளன. எங்கள் எல்லா  சமையலறைகளிலும் வழக்கமாக ஒரு அஞ்சறை பெட்டி உள்ளது. அதில் அன்றாட சமையலுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் உள்ளது.   

மஞ்சள் தூள் 

 மஞ்சள் தூள்:

"எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் மஞ்சள் வைத்துத்தான் தொடங்குவோம்".

        மஞ்சள்  என்பது மிகப்பெரிய கிருமிநாசினி என்பதும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அதனால் தான் அது ஒரு மிகச்சிறந்த  மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

  • மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது.
  • மஞ்சளின் மணம் நமக்கு மன அமைதியை தரவல்லது .
  • மஞ்சள் வயிற்றுப் புண்னை நன்கு ஆற்றும்.
  • இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

  



        மசாலா பால் இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு பானம். மசாலா பாலில் மஞ்சள் தூள், மிளகு தூள், இஞ்சி, பட்டை, மற்றும் ஏலக்காய் சேர்ப்பதனால் மசாலா பால் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.      

           கருப்பு மிளகுடன் சிறிது மஞ்சள் தூள் ஒரு டம்ளர் சூடான பாலில் பனை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்கலாம் (உங்களுக்கு தொண்டை வலி ஏற்பட்டபோது பாட்டி ஏன் இந்த கலவையை கொடுத்தார்  என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் ) இது அமெரிக்காவில்  " கோல்டன் லேட் " என்று அழைக்கப்படுகிறது.(சி.டி.ஏ. மசாலா பால்).                                                                                          

மிளகாய் தூள் 

மிளகாய் தூள்:

         மிளகாய் தூள்  என்றால் நமக்கு ஞாபகத்திற்கு உடனே வருவது கார்ப்புத்  தான்".

        மிளகாயில் கெப்சைசின் என்ற மூலப் பொருள் தான் மிளகாயின் கார தன்மைக்கு காரணம்.கெப்சைசின் என்ற மூலப் பொருள் மருந்து மற்றும் ஊட்டச்சத்து பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

        மிளகாயில் அண்டிபயாடிக் குணத்தை தவிர இதில் பல உடளுக்கு நன்மை தரும் பல மூலப்பொருள் உள்ளது. மிளகாய் என்பது காப்சிகம்  என்ற தாவர இனத்தின் பழமாகும். நம் அன்றாட சமையலில் மிளகாய் தூள்  ஏராளமாக பயன்படுத்துகிறோம்.

  • மிளகாயிலிருந்து எடுக்கப்படும் கெப்சைசின் நமது உடலில் உள்ள அதிக கலோரியை எரித்து நமது எடையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
  • கெப்சைசின் எனும் வேதிப்பொருள் உடலுக்கு வெப்பத்தினை அளிக்கிறது.

    

மல்லித் தூள் 

மல்லித் தூள்:

            " தூக்கு சட்டியை தூக்கி பார்த்து மோப்பம் புடிடா அதில்  என்ன இருக்குன்னு கண்டுபிடிடா "

       அசைவ சமையலில் அதிகமாக சேர்க்கப்படும் மசாலாப் பொருள் தான் மல்லித்  தூள். மல்லித்  தூள்  உலகின் அனைத்து நாடுகளில்  அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை உணவுப் பொருளாக இருக்கிறது. மல்லித் தூள் உணவின் மணத்தையும், ருசியையும் மேம்படுத்த சமையலில் பயன்படுத்துகின்றோம்.

            மல்லித் தூள் பல ஊட்டச்சத்துக்கள் மிகுந்தது என்பதனால் நமது நாட்டில்  உணவு தயாரிப்பு மற்றும் மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மல்லித் தூளை சமையலில் சேர்ப்பதினால் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. 

  • இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
  • சால்மோனெல்லா என்ற நுண்ணுயிரியை அளிக்கிறது.
  • தொற்று ஏற்படுத்தும் நோய் கிருமிகளிடம்  இருந்து நம்மை போராடி அழித்துவிடும்.


சீரக தூள் 

சீரக தூள்: 

"உடலை சீராக வைத்து கொள்ள உதவும் சீரகம் "

            அனைவரது வீட்டு சமயலறையில் இருக்கும் நறுமணமிக்க மசாலா பொருட்களில் ஒன்றுதான் சீரகதூள். இது இந்தியாவில் மட்டுமின்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் சமையலில் சேர்த்து வரும் ஓர் பொதுவான மருத்துவ குணம் வாய்ந்த மசாலாப் பொருள்.

       சீரகம்  பார்ப்பதற்கு ஓமம் போன்று தான் காணப்படும். ஆனால் இவற்றின் நறுமணம் மற்றும் ருசியும்  வேறு வேறு. இந்த சீரகத்தூள் உணவிற்கு மணத்தையும், ருசியையும் அளிப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டது.

  • நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது.
  • குடல் எரிச்சல் கட்டுபடுத்துகிறது.
  • உடல் எடையை குறைக்கிறது.
  •  எளிதில் செரிமானமாவதற்கும் பயனுள்ளதாக உள்ளது.


கருப்பு மிளகு தூள் 

கருப்பு மிளகு தூள்:

        கருப்பு மிளகு " மசாலாப் பொருட்களின் அரசன் " என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறது.

    கருப்பு மிளகு நம் நினைவுக்கு எட்டாத காலத்தில் இருந்து ஒரு கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.

    கருப்பு மிளகு உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். பலரும் மிகவும் விரும்பப்படுகின்ற ஒரு காரமான ருசியை கருப்பு மிளகு உணவுகளுக்கு அளிக்கிறது.

  • கருப்பு மிளகு தூள்  நோய் தொற்று நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
  • புற்று நோய்க்கு எதிரான திறன் மற்றும் வலிமையைத் தீவிரமாக அளிக்கிறது.
  •  சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் இருக்கிறது.




கடுகு 


கடுகு:

    " கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது " 

        கடுகு அஞ்சறை பெட்டிக்கு இன்றியமையாத ஒரு மூலப்பொருள் ஆகும். மேலும் முழு உணவிற்க்கும் குறிப்பாக சட்டினிகள் மற்றும் சாம்பார் போன்ற உணவுகளில் சைவ சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.  வெப்பநிலையின் போது வெளிப்பட்டு வெடிக்கும். 

  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.
  • கடுகில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா நோயை குணப்படுத்துகிறது.
  • கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது.
  • வயிற்றில் இருக்கும் கொக்கி புழு மற்றும் நாடா புழுக்களை வெளியேற்றுகிறது.
  • நரம்பு தளர்ச்சியை போக்குகிறது.


வெந்தயம் 

வெந்தயம்:

"வெந்தையம் போடாத கறியும் கறியல்ல "

        சமயலறையில் அஞ்சறை பெட்டியில் தவிர்க்காமல் இருக்கும் பொருள்களில் வெந்தயமும் ஒன்று. வெந்தயம் மிகுந்த கசப்பைத் தரும், பலன் இனிப்பானது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள். 

    கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து என்று இரண்டையும் கொண்டிருக்கும் சிறந்த குணமுடையது வெந்தயம்.மேலும் ஏராளமான நன்மைகள் உள்ளது.

  • வெந்தயம் உடலுக்கு இரும்பு பலத்தை கொடுக்கக் கூடியவை 
  • ஆரம்பகால சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தும். 
  • நீரிழிவு நோயை குணப்படுத்தும்.
  • கொழுப்பைக் குறைக்கும்.

கரம் மசாலா 


கரம் மசாலா: 

    "நீங்கள் வைக்கும் குழம்பு எட்டு ஊருக்கு மணக்க வேண்டுமா ?இதோ உங்கள்  கரம் மசாலா ."

       கரம் மசாலா இந்திய உணவுகளை சேர்க்கப்படும் புகழ் பெற்ற மசாலாவாகும்.

    அத்தியாவசிய மசாலா தூள்களில் இதுவும் ஒன்றாகும். கரம் மசாலா பல கிரேவி, கறி மற்றும் பருப்பு வகைகளில் ஒரு மூலப்பொருள் அல்லது பல சமையல் குறிப்புகளில் ருசியூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.

        கரம் மசாலாவில் மிளகு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு என பல பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

  • செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
  • உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.
  • சர்க்கரை நோயை சமாளிக்கும்.
  • குடலில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • வயதாவதை தடுக்கும்.

        மசாலா பொடிகளைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பினால், அவற்றின் தோற்றம் சுகாதார நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் எங்கள் வலைப்பதிவுக்கு ( CTA )  குழுசேரும்.

        மேலும் தகவல்களை பெற விரும்பினால் இங்கே பதிவு செய்க. Masala University


Comments

Popular Posts