"நா"விருந்துக்கு விருதுநகர் சால்னா !

பரோட்டாவின் ஒரு அட்டகாசமான நண்பன் என்றால் அது சால்னா... என்பது நம் அனைவராலும் ஏற்கத்தக்க ஒரு கூற்று.!
பரோட்டாவின் ருசி பரோட்டாவில் கிடையாது... அதனை நம் " நா " அறியச் செய்வதும் , நாற்பது மடங்கு அதன் ருசியை கூட்டித்தருவதும் சால்னா மட்டுமே...!
பரோட்டாவின் ருசி பரோட்டாவில் கிடையாது... அதனை நம் " நா " அறியச் செய்வதும் , நாற்பது மடங்கு அதன் ருசியை கூட்டித்தருவதும் சால்னா மட்டுமே...!
பொதுவாக, சாலையோரக் கடைகளில் பசி ஆற்ற நாம் ஒதுங்கும் வேளையில், நம் கண்களுக்கு முதலில் படுவது இந்த பரோட்டா தான்.
மற்ற உணவு பொருட்களை பொருத்த மட்டும், செய்முறை விளக்கம் மட்டும் தான் இருக்கும் .ஆனால் விருதுநகர் பரோட்டா, சால்னாவிற்கு மட்டும்தான் உண்பதற்கென்றே ஒரு முறை உள்ளது.
விருதுநகர் "மொறு மொறு" பரோட்டாவை எடுத்து, இரண்டு கைகளால் உடைத்து அதன் அடுக்குகளை உதிர்த்து போட்டு, சால்னா வாளியில் இருந்து ஆவி பறக்க சுட சுட சால்னாவை எடுத்து, இலையின் ஓர விளிம்பு நனையும் வரை ஊற்றி, பரோட்டாவை ஊற விட்டு சில வினாடிகள் கழித்து,அதனை உண்பது வழக்கம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாலையோர உணவகங்களிலிருந்து உயர்தர உணவகங்கள் வரை சால்னாவின் மணம் மணக்கும்.அந்த கடைகளுக்கெல்லாம் இந்த சால்னா ஒரு விளம்பரதாரர், என்றே கூறலாம். காரணம், இதனுடைய மணமும்,சுவையும் தான். மொத்தத்தில் , சால்னா என்பது நம் அனைவராலும் விரும்பப்படும், மசாலாக்களின் சாரத்தை ஈர்க்கும் ஓர் உணவு.
ஓர் உள்ளூர் புராணத்தின்படி, பலவித்தைகளில் கற்றுத் தெளிந்து பல விருதுகளை வென்ற ஒரு போர் வீரன், ஊருக்குள் வந்து தன்னை எதிர்கொள்ள யாரேனும்

இங்கு உண்டா? என்று அழைப்பு விடுத்தான்.
அந்த அழைப்பை ஏற்று ஓர் குடியானவன் , கர்வம் தலைக்கேறிய அந்த வீரனை கொன்று, வென்று அவனது விருதுகளை கைப்பற்றி விட்டான். அப்போதிலிருந்து இந்நகரம், விருதுகள் வெட்டி என்று அழைக்கப்பட்டது.பின்னாளில் அது மருவி விருதுபட்டி,விருதுநகர் என்று ஆனது.
அந்த அழைப்பை ஏற்று ஓர் குடியானவன் , கர்வம் தலைக்கேறிய அந்த வீரனை கொன்று, வென்று அவனது விருதுகளை கைப்பற்றி விட்டான். அப்போதிலிருந்து இந்நகரம், விருதுகள் வெட்டி என்று அழைக்கப்பட்டது.பின்னாளில் அது மருவி விருதுபட்டி,விருதுநகர் என்று ஆனது.
அதுமட்டுமல்ல,
இப்பகுதியில் மிளகாய், ஏலக்காய் மற்றும் மசாலா பொருட்கள் அமோகமாக வியாபாரம் நடைபெறுகிறது.
விருதுநகர் நிலப்பரப்பில் ஏராளமான கருப்பு மற்றும் சிவப்பு மண் வகைகள் உள்ளன. இவை தான், மிளகாய் விளைச்சலுக்கும் , அவற்றின் மூலம் கிடைக்கும் மசாலா பொருட்களின் உற்பத்திக்கும் ஒரு கருவியாக உள்ளது.
வணிக நகரம் என்று அழைக்கப்படும் இந்த ஊரிலிருந்து ,நல்லெண்ணெய், பருப்பு மற்றும் மசாலா பொருட்களும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றது.மேலும் பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும்ஊராகவும்உள்ளது.மேலும் இந்த உற்பத்திபொருட்கள்யாவும், சால்னா உட்பட இப்பகுதியில் உள்ள உணவு பொருட்களில் அனைத்திலும் சேர்க்கபடுவது, தெளிவாக தெரிகிறது.
விருதுநகரும் , சால்னாவும் :

இந்த சால்னாவானது முகலாய உணவுப் பழக்கங்களில் பிரபலமானது மற்றும் முகலாய பிரியாணியுடன் சேர்த்து ருசிக்கப்படும்.
விருதுநகரில் முகலாயர்கள் வர்த்தகம் செய்யும் வேளையில், மிர்ச்சி-கா-சலன் (சால்னாவின் முகலாய பெயர் )என்ற ஒன்றை அறிமுகம் செய்தனர்.
இந்த மிர்ச்சி-கா-சலனை " மொறு மொறு " விருதுநகர் பரோட்டாவிற்கு, இணையாக சேர்த்து ருசிக்க தொடங்கினர். பிறகு பிற்காலத்தில் மிர்ச்சி-கா-சாலனின் செய்முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சால்னாவாக ருசிக்க துவங்கினர். அதனால் தான் விருதுநகர் சால்னாவிற்கு அவ்வளவு மவுசு.ருசிப்பவரின் நாவை நாட்டியமாடச் செய்யும் திறன் கொண்டது. உதாரணத்திற்கு, விருதுநகரில் உள்ள பர்மா கடை அல்லா பிச்சை கடை, காமலியா ரெஸ்டாரண்ட் இதனை உறுதி செய்கிறது.
விருதுநகரில் உள்ள சின்ன பாய் கடை மற்றும் பெரிய பாய் கடை இந்த கடைகள் இணையத்தில் இடம் பெறாவிட்டாலும், இன்று வரை இந்த விருதுநகர் மக்களால் காலம் கடந்து மணம் மாறாமல் ருசிக்கப்பட்டு வருகிறது.
இக்கடைகளின் , வாசலில் நாம் நுழையும் போதே சால்னாவின் மணம் நம்மை வரவேற்க தொடங்கிவிடும். கண்கள் பரோட்டாவையும், சால்னாவையும் தேடி அலைபாயும். "நா" வானது அதனை ருசி பார்க்க தன்னை ஆயத்த படுத்தி கொள்ளும்.செவியானது அண்ணாச்சி கடை பரோட்டா, எண்ணெயில் தீக்குளிக்கும் ஒலியை கேட்டு உற்சாகமடையும்.
இறுதியில் அதனை கையாறா பிய்த்து, வாயார உண்ணும் பொழுது நமது மெய் மோட்சம் அடையும்.ம்ம்ம்ம்ம்ம்...
அவ்வளவுதான், பரோட்டாவும் சால்னாவும் , மனித உடலின் ஐந்து உணர்வுகளையும் தூண்டி ருசிக்க செய்து விடுகிறது.மேலும் இந்த கடைககளில், சால்னாவிற்கு ஜூஸ் கோழி என்ற ருசிகரமிக்க பெயரும் உண்டு.
இப்போது உண்மையான மற்றும் புகழ்பெற்ற விருதுநகர் சால்னாவை உங்கள் வீட்டின் வாசலில் பெற முடியும்.
இது தரம் மற்றும் சுகாதார முறைகளை அடிப்படையாக கொண்டு தயார் செய்ய பட்டது. இதில் அனைத்து மூல பொருட்களும் சரியான விகிதத்தில் சேர்க்க பட்டு,ஒரு உண்மையான பண்டைய உணவு சுவையை தருகிறது.
Comments
Post a Comment