ருசி இலை
ருசிகரமான(காரணமான) கறிவேப்பிலை!
அறிமுகம்:-
ஒரு மென்மையான மாலைப்பொழுது...
மழை பொழியும் வேலை.
எனது அம்மா,சமையலறையில், வழக்கம் போல் தனது கைவண்ணத்தை காட்டிக்கொண்டிருந்தார்.
இதனை வீட்டின் வாயிலில் இருந்த நான் எப்படி உணர்ந்தேன்!
உண்மையில்
நான் அதை உணரவில்லை, நுகர்ந்தேன்...
பிணிகளை/குறைகளை போக்கும் கறிவேப்பிலை:-
ஆம், எனது அம்மா சமையலுக்கு பயன்படுத்திய அந்த மாயாஜால இலை...!எனது வீட்டின் மூலை முடுக்கெல்லாம் நறுமணத்தை பரவச் செய்தது.
அதன் மாயாஜாலத்தின் பெயர் கறிவேப்பிலை.
கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும்.
கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் "கறிவேப்பிலை" என பெயர் பெற்றுள்ளது.
கறிவேப்பிலை ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இது வெப்ப மண்டல ஆசியாவில் மிக நன்றாக வளரக்கூடியது.
அதுவும் இந்தியாவில்,குறிப்பாகத் தமிழ்நாட்டின் அனைத்து தோட்டங்களிலும் கறிவேப்பிலை மரம் நீங்காத இடத்தினைப் பெற்று இருக்கிறது.
இவற்றுள் "காரமடை கறிவேப்பிலை" கடல் கடந்து விற்பனையாகும் அளவிற்கு பெயர் பெற்றது.
நம்முடைய பாரம்பரியமான சைவ மற்றும் அசைவ, சமையல்
முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இந்நாள் வரை இடம்பெற்றிருக்கிறது.
தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை, அளித்த
ஒரு மகத்தான பொக்கிஷம் இந்தக் கறிவேப்பிலை என்றும் கூறலாம்.
சுவை:-
கறிவேப்பிலைக்கென்று தனியான வாசனை உண்டு. இலேசான காரச் சுவையும், வெப்பத்
தன்மையும் கொண்டவை.
சாம்பார்,குழம்பு, இரசம்
மற்றும் அசைவ சமையல் என நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகின்றது. இதனால்,
உணவு மணமாகவும்,சுவையாகவும் இருக்கும்.
சமையலறையும், கருவேப்பிலையும்:-
கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுக் கறிவேப்பிலை மற்றொன்று காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும்,காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன.
நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர்.
இவ்விலை உணவுக்கு ஒருவித நறுமணத்தைக் கொடுப்பதால் இந்தியர்கள் பெரும்பாலனவர்கள் வீட்டில் சமைக்கப்படும் உணவில் இதனை இன்று வரை, அத்தியாவசிய சேர்மானப் பொருளாக சேர்த்து வருகின்றனர்.
சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலந்தொட்டே நம் நாட்டில் உள்ளது.
காரமான உணவுப் பொருள்களில் கறிவேப்பிலைக்கு ஏதும் பரிந்துரைக்கப்பட்ட அளவு இல்லை. அதனால்
உங்களின் சுவைக்கு ஏற்ற அளவினை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கறிவேப்பிலையும், வைட்டமின்களும்:-
கறிவேப்பிலையில் பாஸ்பரஸ், வைட்டமின்
– ஏ, வைட்டமின் – பி,
வைட்டமின் – பி2,
வைட்டமின் – சி,
சுண்ணாம்பு (கால்சியம்)
மற்றும் இருபுச்சத்து, கார்போஹைட்டிரேட், புரதம், தாது
உப்புக்கள், அமினோ
அமிலங்களான கிலைகோஸைட்ஸ், செரின்,
அஸ்பார்டிக் அமிலம், அலனைன்,
புரோலைன் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.
கறிவேப்பிலையின் மணத்திற்கும் சுவைக்கும் இவைகள் தான் காரணம். இவ்வாறு
பல்வேறு சத்துக்களையும் மருத்துவக் குணங்களையும் கொண்ட கறிவேப்பிலை உடலிற்கு பலத்தையும், எலும்புகளுக்குச் சக்தியினையும் அளிக்கிறது.
பிணிகளை/குறைகளை போக்கும் கறிவேப்பிலை:-
கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் (Folic Acid) கொண்டுள்ளது. எலும்புகளை
வலுவடையச் செய்வதில் போலிக் அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது.
கறிவேப்பிலை இலைகளின் நன்மைகளும், செயல்
திறனும் இரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கின்றன.
கறிவேப்பிலை நோய்த் தொற்றினைக் தடுப்பதற்குக் காரணம் அதில் உள்ள வைட்டமின் ஈ ஆகும்.
கறிவேப்பிலை இலைகளில் உள்ள வைட்டமின் – ஏ கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கவும், மேலும்
முற்றிலுமாகக் குணம் பெறவும் கூட உதவுகிறது.
நல்ல கொழுப்பின் உற்பத்தியை அதிகரிக்க கறிவேப்பிலை உதவி செய்கிறது.
எனவே கறிவேப்பிலை இலைகளை நன்றாக உணவில் சேர்த்துக் கொண்டு முடி சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவது மிகவும் எளிது.
இனியாவது, இப்படி
ஒரு மந்திர மாற்றங்கள் நிறைந்த கறிவேப்பிலையை உணவிலிருந்து அசட்டையாக தூக்கி எறிந்து விடவேண்டாம்.
Comments
Post a Comment